அமைச்சின் முன்னாள் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்) ரூபாய் பணத்தை ஈட்டிய முறையை வெளிப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அனுஷ பெல்பிட்ட இன்று (23) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையானார்.
இந்த நிலையில், அவரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், பணத்தை ஈட்டிய முறையை வெளிப்படுத்தத் தவறியமையினால் அவர் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
















