தைப்பொங்கல் விழாவானது இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவ பீடத்தில், வியாபார முகாமைத்துவமானி வெளிவாரி 3ஆம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பாரம்பரிய முறைப்படி கோலமிட்டு, தோரணம் கட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு முன்பாக பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பொங்கல் நிறைவுற்றதும் சூரியனுக்கு படையல் வைத்து, பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த பொங்கல் விழாவில் வியாபாரஸம முகாமைத்துவமானி முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அணி மாணவர்கள் கலந்துகொண்டனர்.















