காலியில் எல்பிட்டிய – அளுத்கம பிரதான வீதியில் உரகஸ்மன்ஹந்திய பகுதியில் இன்று (26) பிற்பகல் முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரக்கறி வியாபாரி, இனந்தெரியாத நபர்கள் சிலர் தன் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொண்டதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த மரக்கறி வியாபாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்ட இடத்தை சோதனையிட்டத்தில் அப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி நடந்தமைக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














