இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிஹார் என்னுமிடத்திலிருந்து தன் 10 மாதக் குழந்தையுடன் தன் தாய் வீடான ஜார்க்கண்டுக்கு புறப்பட்டுள்ளார் .
இதனிடையே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் அவருக்கு லட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார். இது தன் தாய் தன் கைப்பட செய்தது என்று கூறிய அந்த நபர், உதவியாக அவரது குழந்தையையும் தன் கையில் வாங்கிவைத்துக்கொண்டுள்ளார்.
சிறிது நேரத்தில் சுயநினைவிழந்துவிட்ட பெண், பின்னர் நினைவு திரும்பும்போது அந்த நபரையும் அவரிடமிருந்த தன் குழந்தையையும் காணவில்லை என்பதை புரிந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் தன் குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக, அப்பெண், பொலிசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், CCTV கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்



















