யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மணலானது ஏனைய பொலிஸ் பிரிவுகளான கொடிகாமம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளையும் தாண்டி வந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, ஒரு டிப்பர் தப்பித்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மணல் கிளாலி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


















