கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள மின்னணு வாயில்கள் இன்று (28) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட இந்த முயற்சியின் கீழ் நான்கு மின்னணு வாயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“இ-கேட்” திட்டம் விமான நிலையத்தின் செயல்திறனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

















