மாதவ் ராமதாசன் இயக்கத்தில் 888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில் சரத்குமார் நடித்துள்ள திரைப்படம் ஆழி.
நீண்ட இடைவேளையில் பின் சரத்குமார் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கடலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப் படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரைச் செல்வி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இத் திரைப்படம் எதிர்வரும் 27ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.















