நாட்டின் இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவித்தலை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கண்டி மாவட்டத்தின் பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலாளர் பகுதிக்கு 1 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பன மற்றும் நில்தண்டாஹின்ன பிரதேச செயலாளர் பகுதிகளுக்கு 2 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது













