தமிழ் தேசிய போரவையின் ஏற்பாட்டில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்தும் கலந்துரையாடல் இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்துவதும் நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பு ஓரணியில் செயற்படுவது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
















