இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று நேரத்திற்கு முன்பு இலங்கைக்கு வந்தார்.
இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகள் பராமரிப்பு சீர்திருத்தம் குறித்த உலகளாவிய சாசனத்தை ஆதரிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் லாமி கையெழுத்திட உள்ளார்.
மேலும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெறும் ஒரு நிகழ்விலும் கலந்து கொள்கிறார்.















