ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்த போதிலும், அதன் சிதறல்கள் விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மோதல்களின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.















