பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு, மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்தோ அல்லது திசை மாறி மாறி வீசும். காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. ஆக இருக்கும்.
கடல் நிலை:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அலைகள் குறைவாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்றுடன் கூடிய சூறாவளிக் காற்றும், மிகவும் கொந்தளிப்பான கடலும் எதிர்பார்க்கப்படலாம்.












