முக்கியக் கலைஞரான கன்யே வெஸ்ட்டுக்கு இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து வயர்லெஸ் திருவிழாவின் 2026 ஆம் ஆண்டு நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராப் பாடகரான கன்யே வெஸ்ட் எதிர்வரும் ஜூலை மாதம் வடக்கு லண்டனில் மூன்று இரவுகள் நடைபெறவிருந்த நிகழ்வில் பங்கேற்கவிருந்தார்.
எனினும் அவரது வருகைக்கு எதிராக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, தற்போது ‘யே’ என்று அழைக்கப்படும் வெஸ்ட் இங்கிலாந்துக்குப் பயணம் செய்ய அரசாங்கம் அனுமதி மறுத்துவிட்டது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வயர்லெஸ் திருவிழா அமைப்பாளர்கள் உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், விழா இனி நடைபெறாது என்றும், நிகழ்வுக்கான டிக்கெட்டுகளை வாங்கியவர்களுக்குப் பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
கடந்த பல ஆண்டுகளாக வெஸ்ட், யூத-எதிர்ப்பு, இனவெறி மற்றும் நாஜி ஆதரவுக் கருத்துக்களின் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இதன் காரணமாக, அவரது சமூக ஊடகக் கணக்குகள் பலமுறை முடக்கப்பட்டும் உள்ளன.

















