சர்ச்சைக்குரிய மேலதிக மருத்துவ உள்ளகப் பயிற்சி நியமனச் செயல்முறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக தீர்மானத்தை மே மாதம் 08ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தமது பயிற்சிக் காலத்தை நிறைவு செய்த இரண்டு வைத்தியர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த நியமன நடைமுறையிலுள்ள, சிக்கல்கள் தொடர்பாகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.














