• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்

புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்

Hanushya P by Hanushya P
2026/04/16
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

எமது காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் நடாத்திய ஊடக சந்திப்பில் நாமும் கலந்துகொண்டு அமைச்சருக்கு முன்னால் எமது நிலைப்பாடுகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க விருப்பம் தெரிவித்த போது எமக்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் நாளை நடைபெறவுள்ள நிலையில்,  காணிகளை அளவிடுவதற்கு சம்மதிப்பதா,  இல்லையா? என்பதனை தீர்மானிப்பது தொடர்பில் காணி உரிமையாளர்களால் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் காணி உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு கூறியிருந்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

காணி உறுதி உள்ளவர்களின் காணிகளை தான் அளவீடு செய்யப் போகிறார்கள். காணி உறுதி இல்லாதவர்களின் காணிகள் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாகவோ, அதற்கான தீர்வு தொடர்பாகவோ எதுவும் எமக்கு அறியத் தரப்படவில்லை.

விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கொழும்பில் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தான் எமது 17 பேரின் காணி உறுதிகளும் உண்மையானவை என உறுதி செய்துள்ளார்கள். அதன் பின்னர் அந்த காணிகளுக்கான வரைபடங்களை கீறுவதற்காக காணிகளை அளவீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பில் காணி உரிமையாளர்கள் எங்களுக்கு எதுவும் தெரியப்படுத்தாமல், சுமார் 2 மாதங்களின் பின்னர் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை எம்மை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து காணிகளை அளவீடு செய்யப் போகிறோம். அதற்கு உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் எனச் சொன்னார்கள்.

அதில் எங்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. காணி விடுவிப்பு தொடர்பிலான கூட்டம் என இதுவரை மூன்று கூட்டங்கள் கொழும்பில் நடைபெற்றுள்ளன.

விகாராதிபதியை கூட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள். எமக்கு கூட்டம் தொடர்பில் எதனையும் அறிவிக்க மாட்டார்கள். கூட்டத்தில் என்ன கதைக்கப்பட்டது என்று யாரும் எமக்கு கூற மாட்டார்கள். ஊடகங்களுக்கும் அவை தொடர்பில் எதனையும் கூறமாட்டார்கள். கூட்ட அறிக்கைகளை கூட நாம் கேட்டுஇ எமக்கு அதனை தந்ததில்லை.

காணிகளை அளவீடு செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயத்தை இரு மாதங்களின் பின்னர் எமக்கு குறுகிய கால இடைவெளியில் அழைப்பு விடுத்து கூறி காணியை அளவீடு செய்ய சம்மதம் கோருகின்றனர். அதற்கு சம்மதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாம் மற்றவர்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்வினை பெற எமக்கு கால அவகாசம் தரக்கூடாது என்பது போன்றே செயற்பட்டுள்ளனர்.

காணி அளவீட்டுப் பணிகள் காணி விடுவிப்புக்காக மட்டுமே என்பதை உறுதி அளிக்கவேண்டும் என கோரினோம். அப்படித் தர முடியாது என மாவட்ட செயலர் கூறினார்.

சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காணிகளை விடுவிப்பதற்காகத் தான் காணி அளவீடுகளை மேற்கொள்ளவுள்ளோம் என கூறியதால், அந்த கூட்டத்தின் கூட்ட அறிக்கை தரச் சொல்லி கேட்டோம். அதனை அவர்கள் தரவில்லை.

சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் கடற்றொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது நாமும் அந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, அமைச்சர் ஊடகங்களுக்கு கூறும் கருத்துக்களை நேரில் செவிமடுக்க வேண்டும் எனவும் அதே ஊடக சந்திப்பில் அமைச்சர் மாவட்ட செயலர் முன்பாக நாமும் எமது நிலைப்பாட்டை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என கோரினோம்.

ஊடக சந்திப்பில் காணி உரிமையாளர்கள் அமைச்சருடன் சரிக்கு சரி அமர முடியாது என சொல்லி, ஊடக சந்திப்பில் எம்மை கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. அமைச்சரின் ஊடக சந்திப்பு முடிவடைந்த பின்னர் மாவட்ட செயலக வளாகத்தில் பிறிதொரு இடத்தில் வைத்தே நாம் ஊடகங்களுக்கு எமது நிலைப்பாட்டை கூறினோம்.

தம்மை சாதாரணமானவர்கள் என்றும் ஜனாதிபதி கூட சாதாரணமானவர்களுடன் சாதாரணமாக உரையாடுவார் என கூறுபவர்கள், கடற்தொழில் அமைச்சருடன் சரிக்கு சமனாக இருந்து ஊடகங்களை சந்திக்க அனுமதிக்க மாட்டோம் என எமக்கு கூறியுள்ளார்கள். இவர்களின் செயற்பாடுகளை பார்க்கும்போது, எமக்கு சந்தேகங்கள் வருகின்றன என தெரிவித்தனர்.

Related

Tags: granted permissionMinisterownersTayiti Viharaya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று முக்கிய சட்டமூலங்கள் இன்று இந்திய நாடாளுமன்றில் தாக்கல்!

Next Post

தையிட்டி நில மீட்பு: விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் ஓரணி திரண்டன!

Related Posts

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!
இலங்கை

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!
இலங்கை

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!
இலங்கை

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

2026-05-26
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!
இலங்கை

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

2026-05-26
யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!
இலங்கை

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

2026-05-26
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தளர்வு!

2026-05-26
Next Post
தையிட்டி நில மீட்பு: விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் ஓரணி திரண்டன!

தையிட்டி நில மீட்பு: விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் ஓரணி திரண்டன!

பிரிட்டன் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி!

பிரிட்டன் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி!

நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் படுகாயம்

நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் படுகாயம்

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

0
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

0
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

0
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

0
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

0
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

2026-05-26
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

2026-05-26
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

2026-05-26

Recent News

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

2026-05-26
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

2026-05-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.