• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தையிட்டி நில மீட்பு: விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் ஓரணி திரண்டன!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/16
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரசாங்கத்தின் மறைமுகத் திட்டங்களை முறியடிப்பது குறித்தும் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று யாழ் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.

தையிட்டி நில உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தினர்.

​கடந்த சனிக்கிழமை அமைச்சர் சந்திரசேகரன் அவர்களால் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், விகாரை அமைந்துள்ள காணி தொடர்பில் நிலவும் மௌனம் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் நில விடுவிப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் அதேவேளை, மறுபுறம் இந்தச் சட்டவிரோத விகாரையை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பலமான சட்ட மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை இங்கு உரையாற்றியவர்கள் வலியுறுத்தினர்.

​இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்வு நிலைத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் மக்கள் கூட்டணியின் வி. மணிவண்ணன் மற்றும் சட்டத்தரணி க.சுகாஸ் ஆகியோர் பங்கேற்று அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

இவர்களுடன் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இணைந்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதற்கான ஆவண ரீதியான மற்றும் அறவழிப் போராட்ட வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.

​முடிவில், அமைச்சரின் வாக்குறுதிகள் வெறும் காலங்கடத்தும் தந்திரமா அல்லது உண்மையான தீர்வா என்பதை உன்னிப்பாகக் கவனிப்பதோடு, விகாரையை நிலைநிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கப் போவதில்லை என ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்டது.

அத்துடன், நிலமிழந்த மக்களின் உரிமைகளுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சிவில் சமூகத்துடன் இணைந்து ஒருமித்த குரலில் போராடுவது என்றும் இக்கூட்டத்தில் உறுதியெடுக்கப்பட்டது.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்

Next Post

பிரிட்டன் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி!

Related Posts

புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்
இலங்கை

2026-04-16
இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

2026-04-16
ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

2026-04-16
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு பிணை!

2026-04-16
மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!
இலங்கை

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

2026-04-16
Next Post
பிரிட்டன் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி!

பிரிட்டன் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பிரிட்டன் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி!

பிரிட்டன் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி!

0
தையிட்டி நில மீட்பு: விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் ஓரணி திரண்டன!

தையிட்டி நில மீட்பு: விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் ஓரணி திரண்டன!

0
புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்

புறக்கணிக்கப்பட்ட தையிட்டி மக்கள்! கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் நேர்ந்த அனுபவம்

0
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று முக்கிய சட்டமூலங்கள் இன்று இந்திய நாடாளுமன்றில் தாக்கல்!

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சீனா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.