• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/27
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ் போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (26) பிற்பகல் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் காவி உடை தரித்த நபர்களை வழிநடத்தியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர், கம்பஹா – மீகஹமுல்ல பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தக் காவி உடை தரித்த குறித்த 22 சந்தேக நபர்களும், நேற்று (25) இரவு 10.11 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த நிலையில் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய, இவர்கள் அனைவரிடமும் இருந்த ஒரே வகையிலான, வெவ்வேறு நிறங்களைக் கொண்ட பயணப் பொதிகளைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது கல்வி உபகரணங்கள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அந்தப் பயணப் பொதிகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த “குஷ்” மற்றும் “ஹேஷ்” போதைப்பொருட்களை அதிகாரிகள் இதன்போது அடையாளம் கண்ட நிலையில் 22 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஒவ்வொருவரிடமும் இருந்த பயணப் பொதிகளிலும் சுமார் 5 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுடன், கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை 112 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்தப் போதைப்பொருள் தொகுதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகும்.
அத்துடன், காவி உடை தரித்த குழுவினர் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் கைதான முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, விசாரணைகளின் போது, இச்சுற்றுப்பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பதிலாக, அனுசரணையாளர்களினால் வழங்கப்பட்ட, பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் அடங்கிய பயணப் பொதிகளை இலங்கைக்கு எடுத்து வருமாறு ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்த மூவரும் கடந்த மாதமும் 12 பேரைக் கூட்டிச் சென்று தாய்லாந்துக்குச் சென்று வந்துள்ளதுடன், அடுத்த மாதம் மற்றுமொரு குழுவை அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் மேற்பார்வையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்களும் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இந்தச் சாசன விரோதச் செயலில் ஈடுபட்ட போலிப் பிக்குகள் குறித்து அந்தந்த நிக்காயப் பிரிவுகள் ஊடாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, அவர்களைச் சாசனத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: arrestCourt ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

Next Post

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

Related Posts

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
இலங்கை

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !
இலங்கை

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04
செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
இலங்கை

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
Next Post
ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

0
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04

Recent News

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.