மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதியின் தலைமையில் மாத்தளை மாவட்ட செயலகத்தில் இன்று (12) காலை ஆரம்பமானது.
‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், வீடுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மாத்தளை நகர அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
மேலும், ‘ முழு நாடுமே ஒன்றாக’ போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படுகிறது.
மாத்தளை விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரை ஆற்றினார்













