நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மனு மீதான விசாரணைக்காக ஜூன் 16 ஆம் திகதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
இன்று (03) மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் மனு விரிவாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மனு பரிசீலிக்கப்பட்டபோது மனுதாரர் யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.














