போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்த, திட்டத்திற்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டின் தலைவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், எதிர்கால அமைதிப் பேச்சுவார்த்தை செயல்பாட்டில் ஐரோப்பா முக்கியப் பங்காற்றும் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய ‘E3’ என்ற முறைசாரா பாதுகாப்பு கூட்டணியின் தலைவர்கள், டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.
இதன் பின்னர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இராஜதந்திர வழிமுறைகள் மூலம் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை மதிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அனுப்பிய பகிரங்கக் கடிதம் ஒன்றின் மூலம் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், நீதியானதும் நீடித்த அமைதிக்கு உடனடி மற்றும் முழுமையான போர் நிறுத்தத்தை ஒரு முன்நிபந்தனையாக E3 தலைவர்களும் உக்ரைனும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















