• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

ஆரச்சிகட்டுவவில் காலணி வாங்கச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/21
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆரச்சிகட்டுவ, செங்கல்ஓய, வெலிதுடுவ மண்கட பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் பெற்றோருக்குத் தெரியாமல் நீராடச் சென்ற 13 வயதுடைய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆரச்சிகட்டுவ, வைரன்கட்டுவ பகுதியில் வசித்து வந்த எஸ்.ஜே.எம்.லகிந்து சாமிக என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஹெலம்பவட்டவன மகா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தவர் என்பதுடன், இரண்டு மூத்த சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய மகன் ஆவார்.

கடந்த 19ஆம் திகதி மாலை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சாமிக, தனது பாடசாலை நண்பனுடன் காலணி ஒன்று வாங்குவதற்காக ஆரச்சிகட்டுவ நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

சாமிக வீட்டிலிருந்து புறப்படும் போது அவரது பெற்றோர்கள் வீட்டில் இருக்கவில்லை.

அவரது தந்தை சிலாபம் பிரதேச செயலகத்திலும், தாய் தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

நண்பனுடன் நகருக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற சாமிக, வீட்டிற்குத் தெரியாமல் செங்கல்ஓயா, வெலிதுடுவ மண்கட பகுதிக்குச் சென்று அங்கு நீராடியுள்ளார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக செங்கல்ஓயாவின் ஆழமான பகுதியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் சாமிகவுடன் சென்ற நண்பன் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளதுடன், அவன் நீரிலிருந்து கரைக்கு வந்து தனது நண்பனைக் காப்பாற்றுமாறு சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.

அவனது கூச்சல் சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு விரைந்த பிரதேச மக்கள், ஓயாவிற்குள் இறங்கி சாமிகவைத் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

நீண்ட தேடுதலின் பின்னர், மக்கள் இணைந்து நீரில் மூழ்கியிருந்த சாமிகவை மீட்டு, அவசரமாக ஆனவிழுந்தாவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

எவ்வாறாயினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாணவனின் மரணம் தொடர்பான மரணப் பிரேத பரிசோதனை சிலாபம் பொது வைத்தியசாலையில் நடைபெற்றதுடன், அது நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் மரணம் என்பது மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சாமிகவின் சடலம் நேற்று இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. திரளான பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் கண்ணீருக்கு மத்தியில், அவரது இறுதிச் சடங்குகள் இன்று (21) ஆரச்சிகட்டுவ பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுவிட்சர்லாந்தில் இன்று அமெரிக்க – ஈரான் புதிய சுற்று பேச்சுவார்த்தை: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

Next Post

கட்டுநாயக்கவில் 1.32 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் கைது!

Related Posts

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!
சினிமா

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

2026-09-20
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!
இலங்கை

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

2026-09-20
டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!
இலங்கை

டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

2026-09-20
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!
இலங்கை

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

2026-09-20
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!
இலங்கை

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள்!

2026-09-20
கடந்த ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற பேரணி உணர்த்துவது? நிலாந்தன்!
இலங்கை

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணி உணர்த்துவது? நிலாந்தன்!

2026-09-20
Next Post
கட்டுநாயக்கவில் 1.32 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் கைது!

கட்டுநாயக்கவில் 1.32 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் கைது!

இரணைமடு குளத்தில் சிறுவன் மாயம் தேடும் பணிகள் தீவிரம்

காலி கொக்கல ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்!

உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

0
“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

0
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

0
டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

0
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

0
‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

2026-09-20
“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

2026-09-20
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

2026-09-20
டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

2026-09-20
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

2026-09-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.