• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
சுவிட்சர்லாந்தில் இன்று அமெரிக்க – ஈரான் புதிய சுற்று பேச்சுவார்த்தை: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

சுவிட்சர்லாந்தில் இன்று அமெரிக்க – ஈரான் புதிய சுற்று பேச்சுவார்த்தை: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/21
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட போர் பதற்ற தணிப்பு மற்றும் அமைதி உடன்படிக்கையை அமுல்படுத்துவது தொடர்பான அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான புதிய சுற்று உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தை இன்று (21) சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்குகின்றது.

இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

அதேவேளை, ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரும் சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளனர்.

இப்பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

சுவிஸ் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டத் தவறினால், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் அமெரிக்காவின் சார்பில் கடுமையான கட்டணம் விதிக்கப்படும் என அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இரு நாடுகளும் எட்டிய 14 அம்ச அமைதி உடன்படிக்கையின் முதல் நிபந்தனை, “அமெரிக்கா, ஈரான் மற்றும் போரின் பிற தரப்பினர் உடனடியாக ஒருவருக்கொருவர் எதிராகவும் லெபனானுக்கு எதிராகவும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்” என்பதாகும்.

இதன்படி அமெரிக்காவும் ஈரானும் தாக்குதல்களை நிறுத்திய போதிலும், இஸ்ரேல் இந்த முடிவை ஏற்கத் தயங்கியது.

பின்னர் கட்டார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலும் லெபனானும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்ட போதிலும், இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி உடன்படிக்கையை மீறியுள்ளது.

இதன் காரணமாக, நேற்று (20) பிற்பகல் முதல் அனைத்து விதமான கடல்சார் போக்குவரத்துகளுக்காகவும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஈரானின் மத்திய இராணுவ கட்டளை தலைமையகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு அருகில் பயணிக்கும் சர்வதேச கப்பல்கள் எவையும் அதன் வழியாகச் செல்ல வேண்டாம் என ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படை (IRGC) எச்சரித்துள்ளது. இந்த உத்தரவை மீறிப் பயணிக்கும் கப்பல்கள், ஈரானிய நீர்மூழ்கி குண்டுகள் (Naval Mines) அல்லது கடற்படையின் நேரடித் தாக்குதல் இலக்குகளுக்கு ஆளாக நேரிடலாம் என்றும் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் விடுத்துள்ள அறிக்கையை அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் சர்வதேச கடல்சார் போக்குவரத்து எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மாத்திரம் 55 வணிகக் கப்பல்கள் இந்த நீரிணைச் சந்தியைக் கடந்து பாதுகாப்பாகப் பயணித்துள்ளதுடன், 17 மில்லியனுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் பீப்பாய்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க தரப்பு அமைதி உடன்படிக்கையில் தனக்குரிய பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தவறினால், ஈரான் தனது தேசிய பாதுகாப்பிற்காக அடுத்தடுத்த அத்தியாவசிய நடவடிக்கைகளை எடுக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற உத்தியோகபூர்வ எதிர்பார்ப்பிலேயே ஈரான் இதில் கையெழுத்திட்டது என்றும் அவர் ஈரானிய ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இன்றைய சுவிஸ் பேச்சுவார்த்தை சர்வதேச அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: world news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டில் நடக்கும்- கல்வி அமைச்சு திட்டவட்டமான பதில்!

Next Post

ஆரச்சிகட்டுவவில் காலணி வாங்கச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!

Related Posts

அர்ஜுனாவுக்குப்  பதில் வினையாற்றும் அரசியல்? நிலாந்தன்!
இலங்கை

அர்ஜுனாவுக்குப்  பதில் வினையாற்றும் அரசியல்? நிலாந்தன்!

2026-06-21
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
இஸ்ரேல்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு – போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா, இஸ்ரேல் மீறியதாக குற்றச்சாட்டு!

2026-06-21
இந்தியாவில்  நீட் மறுத்தேர்வு இன்று  !
இந்தியா

இந்தியாவில் நீட் மறுத்தேர்வு இன்று !

2026-06-21
எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் வரலாற்றில் முதன்முறையாக தனது தனிப்பட்ட வரி விபரங்களை பகிரங்கமாக வெளியிடவுள்ளார் மூன்றாம் சார்லஸ் மன்னர்!

2026-06-21
எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!
இங்கிலாந்து

எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-06-21
பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!
இங்கிலாந்து

பெட்ஃபோர்ட் ரயில் விபத்தில் 9 பேர் நிலை கவலைக்கிகிடமாக உள்ளதாக மீட்புப் பிரிவினர் தெரிவிப்பு!

2026-06-21
Next Post
மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

ஆரச்சிகட்டுவவில் காலணி வாங்கச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

ஆரச்சிகட்டுவவில் காலணி வாங்கச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!

0
சுவிட்சர்லாந்தில் இன்று அமெரிக்க – ஈரான் புதிய சுற்று பேச்சுவார்த்தை: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

சுவிட்சர்லாந்தில் இன்று அமெரிக்க – ஈரான் புதிய சுற்று பேச்சுவார்த்தை: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2026 உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டில் நடக்கும்- கல்வி அமைச்சு திட்டவட்டமான பதில்!

0
கிரிக்கெட் வரலாற்றில் வெறும் 11 பந்துகளில் அரைச்சதம் கடந்து இந்திய வீரர் வைபவ் சூர்யவன்சி உலக சாதனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.