ஆளும் தொழிற்கட்சியில் தலைமை மாற்றம் ஏற்பட்டு, நாட்டின் அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்றால், அவர் பதவியேற்ற “ஆறு மாதங்களுக்குள்” ஒரு புதிய பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என ‘ரிஃபார்ம் யுகே’ (Reform UK) கட்சியின் துணைத் தலைவர் ரிச்சர்ட் டைஸ் (Richard Tice) வலியுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி நேர்கானல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர், பிரிட்டனின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் புதிய பிரதமருக்கான மக்கள் ஆணை (Mandate) குறித்துப் பல்வேறு முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதேவேளை, ஆண்டி பர்ன்ஹாம் பிரதமராகி, தனது புதிய திட்டங்களைச் செயல்படுத்த விரும்பினால், அவர் நாட்டின் வரிகளைப் பெருமளவில் உயர்த்த வேண்டியிருக்கும்; அல்லது நாட்டின் இருப்புநிலைக் குறிப்பை மேலும் கடன் சுமைக்குள் தள்ள வேண்டியிருக்கும். எனவே, அதற்கு முன்னதாக மக்கள் தீர்ப்பைப் பெறுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆண்டி பர்ன்ஹாம் தனது சொந்த அரசியல் பலத்தையும் மக்கள் ஆணையையும் நிரூபிப்பதற்காக, தைரியமாகத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என ரிச்சர்ட் டைஸ் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















