இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் அடுத்த சீசனுக்கு முன்னதாக ஒரு முக்கிய வீரர் பரிமாற்ற ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.
2025 சீசனுக்காக சாதனைத் தொகையான ரூ. 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்திருந்த ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.
அதேநேரம், குல்தீப் யாதவ் லக்னோ அணியில் இணைகிறார்.
இந்த நடவடிக்கை இன்று (23) மதியம் ஐபிஎல் நிர்வாகக் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டது.
2016 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஒன்பது சீசன்களைக் கழித்து, 111 போட்டிகளில் விளையாடிய (டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஒரு வீரர் ஆடிய அதிகபட்ச போட்டிகள் இதுவே) அந்த அணிக்கே பண்ட் மீண்டும் திரும்புகிறார்.
ஏறக்குறைய ஒரு தசாப்தமாக அந்த அணியின் முக்கிய முகங்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், 43 போட்டிகளில் அணியை வழிநடத்தியும் உள்ளார்.
மறுபுறம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஐந்து சீசன்கள் கொண்ட மிகவும் வெற்றிகரமான காலக்கட்டத்திற்குப் பிறகு குல்தீப் லக்னோ அணியில் இணைகிறார்.
2022-ல் அந்த அணியில் இணைந்ததிலிருந்து, இந்த இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் (wrist spinner) 65 போட்டிகளில் 72 விக்கெட்டுகளை வீழ்த்தி, மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.
குல்தீப் தனது தற்போதைய ஊதியமான ரூ. 13.50 கோடிக்கு லக்னோ அணியில் இணையவுள்ளார்.















