முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார்.
குறித்த பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.














