• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பொசொன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கூறியுள்ளதாவது,

இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றி, பெருமைமிக்க ஒரு நாகரிகத்திற்கு பாதை அமைத்த உயரிய பௌத்த தர்மம் இந்நாட்டிற்கு கிடைத்தது இன்று போன்றதொரு பொசொன் பௌர்ணமி தினத்திலேயாகும்.

தேரவாத பௌத்த தத்துவத்தினதும் பாரம்பரியத்தினதும் மையமாக எமது நாடு உருவான ஆரம்பமும் மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் இணைந்து வரலாற்றில் பதியப்பட்டதுடன் சமூக மாற்றத்துடன் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தக் காரணமான அந்த அற்புதமான நிகழ்வு, வெறும் மத ரீதியான அர்த்தத்திற்கு அப்பால் சென்று, எமது நாட்டின் கலாசார, சமூக, அரசியல் ஆகிய ஒவ்வொரு துறையிலும் மேலும் முன்னேற்றமான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது.

இதே போன்று, ஒரு தேசமாக எழுச்சி பெறுவதற்கான பலமான அடித்தளம் பௌத்த தத்துவத்துடன் எமக்குக் கிடைத்த அதேவேளை, கல்வியில் மாற்றத்தையும்  ஏற்படுத்திய பௌத்த தர்மம், விகாரைகளையும் பிரிவேணாக்களையும் உருவாக்கி நாட்டு மக்களிடையே ஆன்மீக புரட்சியை ஏற்படுத்துவதுடன், அறிவை வழங்கும் சமூகப் பணியையும் நிறைவேற்றுவதில் பெரும் பங்களிப்பைச் செய்தது. அது மாத்திரமன்றி கட்டிடக்கலை, சித்திரக் கலை, நீர்ப்பாசனம், வீடமைப்பு, சிற்பக் கலை போன்ற கலைப் படைப்புகளின் புதிய மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் எமது தேசத்தை பெருமைமிக்க தேசமாக உலகின் முன் உயர்த்தி நிறுத்தியது.

அத்தகைய பெருமைமிக்க, மேலான வரலாற்றின் இன்றைய பாரம்பரிய வாரிசுகளான நாம் அனைவருக்கும் இன்றைய தினத்தில் சுமத்தப்பட்டுள்ள தவிர்க்க முடியாத பொறுப்பாவது, இன்று சமூகத்தினுள் அழிந்து கொண்டிருக்கும் நற்பெறுமானங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் மீண்டும் மீட்டெடுத்து நாகரிகம் நிறைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதேயாகும். 

அதில், பாராளுமன்றம், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் நாகரிகத்தைக் கொண்டுவருகின்ற இப் போராட்டத்தில் நாம் இன்னமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

நெறிமுறை இல்லாத நாடொன்று முன்னேற்றத்தை அடைய முடியாது. 

மஹிந்த தேரர் போதித்த சுல்லஹத்திபதோபம சூத்திரம் வலியுறுத்துவது, படிமுறையான பயிற்சியின் அவசியத்தையாகும். 

பௌத்த தர்மத்துடன் இந்நாட்டிற்குக் கிடைத்த அந்தப் பெருமைமிக்க நாகரிக சமூகத்தை மீண்டும் இலங்கை மண்ணில் மீள் நிலைநிறுத்துவதன் மூலம், நாட்டிற்குத் தேவையான ஒழுக்கவியல், சமூகவியல் மற்றும் சூழலியல் சார்ந்த புதிய மனப்பாங்குகளைக் கொண்ட நவீன நாகரிக தேசத்தை கட்டியெழுப்புவதற்காக மென் மேலும் உறுதி பூண்டு கைகோர்த்துக் கொள்வோம்! என நான் அனைவரையும் அழைக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் கருணை, இரக்கம், ஞானம் ஆகியவற்றால் இதயங்களை ஒளிரச்செய்யும் புண்ணியமிக்க பொசொன் தின வாழ்த்துகள் – என்று குறிப்பிட்டுள்ளார்.

May be an image of temple and text that says "සැමගේ හදවත් දයාවෙන්, කරුණාවෙන් සහ ප්‍රඥදාවෙන් ආලෝකමත් වන පින්බර පොසොන් මංගල්‍යයක් වේවා! உங்கள் அனைவரினதும் இதயங்கள் கருணை, இரக்கம், மற்றும் மற் ஞானத்தால் ஒளிரும் ஒரு புண்ணியமான பொசொன் பண்டிகையாக பண் அமைய வாழ்த்துகள்! 2026.06.29 f PMD ජනාධිපති මාධ්‍ය අංශය ஜனாதிபதி ஊள ஊட கப் பிரிவு PRESIDENTS MEDIA DIVISION"

Related

Tags: அநுரகுமாரபொசொன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

Related Posts

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
இலங்கை

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2026-06-29
சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
உலகம்

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-06-29
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!
இந்தியா

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

2026-06-29
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு
இலங்கை

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

2026-06-29
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி
இலங்கை

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு !

2026-06-29
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

துப்பாக்கியை காணாமல் ஆகிய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-06-29
Next Post
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் - அமெரிக்கா இணக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0
சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

0
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

0
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

0
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

0
கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2026-06-29
சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-06-29
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

2026-06-29
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

2026-06-29
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

2026-06-29

Recent News

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2026-06-29
சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-06-29
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

2026-06-29
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

2026-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.