• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/01
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (30) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு சார்ந்த 15 முக்கிய தீர்மானங்களுக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையில் எட்டப்பட்ட பிரதான முடிவுகளின் விபரங்கள் வருமாறு:

பேருந்துக் கட்டணக் கொள்கையில் திருத்தம்

மத்திய கிழக்குப் பிராந்தியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள், டொலர் விநியோகத் தளம்பலால் உயர்ந்துள்ள உதிரிப்பாகங்களின் விலை மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘லங்கா மெட்றோ ரான்ஸ்சிற்’ தாழ்மிதிப் பேருந்துகளின் இயக்கச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பேருந்துக் கட்டணச் சூத்திரத்தை இற்றைப்படுத்தவும், கட்டணக் கட்டமைப்பைத் திருத்தம் செய்யவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் விதப்புரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் பாதணி வழங்கும் திட்டம்

மாகாண மட்டத்திலுள்ள 8,36,571 பாடசாலை மற்றும் பிரிவெனா (துறவு நிலை/ துறவு நிலையில்லாத) மாணவர்களுக்கு 2027 ஆம் ஆண்டிற்காக ஒரு சோடி பாதணி வழங்கும் திட்டம் 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

இதற்கமைய மேல், தென், சப்பிரகமுவ, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்தும், ஏனைய மாகாணங்களில் தலா 3,000/- ரூபாய் பெறுமதியான பரிசுச்சீட்டுகள் (Vouchers) மூலமும் பாதணிகளைக் கொள்வனவு செய்யக் கல்வி அமைச்சுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரச அபிவிருத்திப் பணிகளுக்காக 535 பயன்பாட்டு வாகனங்கள் கொள்வனவு

அரச அபிவிருத்திக் கருத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, நிதி அமைச்சின் மூலம் உழவு இயந்திரங்கள் – 175,
கழிவுநீர் பவுசர்கள் – 100, பெக்கோ இயந்திரங்கள் – 100, டிப்பர் ஊர்திகள் – 160 ஆகிய
வாகனங்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 ‘தித்வா’ புயல் அனர்த்த மீள்நிலைக் கருத்திட்டங்கள்

2025 ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘தித்வா’ புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொது உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை ‘மிகவும் சிறப்பாக மீளக்கட்டியெழுப்புதல்’ என்ற கொள்கையின் கீழ் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, வருடாந்த வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் 2026 முதல் 515,460.26 மில்லியன் ரூபாய் செலவில் 1,028 மத்திய அரச கருத்திட்டங்களும், 102,219.05 மில்லியன் ரூபாய் செலவில் 38 மாகாண சபைக் கருத்திட்டங்களும் அமுல்படுத்தப்படவுள்ளன.

 யாழ்ப்பாண நகர சபைக் கட்டிட நிர்மாணக் கருத்திட்டம் (கட்டம் – 02)

பொருளாதார நெருக்கடியால் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாண நகர சபைக் கட்டிடத்தின் 70% பௌதீகப் பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், வளிச்சீராக்கித் தொகுதி உள்ளிட்ட அதன் இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அசல் ஒப்பந்தக்காரரான மத்திய பொறியியல் சேவைகள் கம்பனி மூலம் 1,958.85 மில்லியன் ரூபாய் திருத்தப்பட்ட செலவினத்தின் கீழ் பணிகளைப் பூர்த்தி செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 விசர் நாய்க்கடி ஒழிப்பு மற்றும் வளர்ப்புப் பிராணிகள் பதிவுச் சட்டமூலம்

விசர் நாய்க்கடி நோய் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் பதிவு தொடர்பான பழைய கட்டளைச் சட்டங்களை இணைத்து, நீர்வெறுப்பு நோய்த் தடுப்பூசியைக் கட்டாயமாக்கல், பிராணிகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களின் அதிகாரங்களை வரையறுத்தல் ஆகிய நோக்கங்களுடன் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதல் பெற்ற புதிய சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடவும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 மத்திய வங்கியின் வங்கிகள் கண்காணிப்புத் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கல்

அனுமதிப்பத்திரம் பெற்ற வங்கிகளைக் கண்காணிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் பணிகளின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், பௌதீக அறிக்கை முறைமைக்கு மாற்றாக நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்புத் தீர்வொன்றை (Automation) அமுல்படுத்துவதற்கான பெறுகைச் செயன்முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 2026 சிறுபோக நெல் கொள்வனவு

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்வனவு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் தங்குதடையின்றி வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காகக் கமத்தொழில் அமைச்சிற்கு 6,000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

 ‘தித்வா’ புயல் மீள்நிர்மாணத்திற்காக இந்திய அரசிடமிருந்து 450 மில்லியன் டொலர் உதவி

‘தித்வா’ புயலால் இலங்கைக்கு ஏற்பட்ட 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பாதிப்புகளை ஈடுசெய்ய, இந்திய அரசாங்கம் தனது ‘சாகர்பந்து நடவடிக்கையின்’ கீழ் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி:மொத்த உதவி – 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள், கடன் வசதி – 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள்,  கொடை – 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த இருதரப்பு நிதியுதவி ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சுக்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Cabinet Decisions on 30.06.2026 (T).

Related

Tags: Cabinetsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொசன் தானசாலையில் சர்ச்சை… புகையிலையுடன் வெற்றிலை வழங்கியவர் கைது!

Next Post

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

Related Posts

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை
இலங்கை

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

2026-07-01
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

2026-07-01
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

பொசன் தானசாலையில் சர்ச்சை… புகையிலையுடன் வெற்றிலை வழங்கியவர் கைது!

2026-07-01
14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!
இலங்கை

14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

2026-07-01
தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!
இலங்கை

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!

2026-07-01
தலைமன்னார் ரயில் பாதையில் பணிகள் நிறைவடைந்தன!
இலங்கை

தலைமன்னார் ரயில் பாதையில் பணிகள் நிறைவடைந்தன!

2026-07-01
Next Post
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

0
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

0

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் !

0
14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

பொசன் தானசாலையில் சர்ச்சை… புகையிலையுடன் வெற்றிலை வழங்கியவர் கைது!

0
கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

2026-07-01
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

2026-07-01

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் !

2026-07-01
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

பொசன் தானசாலையில் சர்ச்சை… புகையிலையுடன் வெற்றிலை வழங்கியவர் கைது!

2026-07-01
14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

2026-07-01

Recent News

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

2026-07-01
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

2026-07-01

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் !

2026-07-01
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

பொசன் தானசாலையில் சர்ச்சை… புகையிலையுடன் வெற்றிலை வழங்கியவர் கைது!

2026-07-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.