நேட்டோ (Nato) அமைப்பின் உச்சிமாநாடு துருக்கியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், பிரித்தானியாவின் பாதுகாப்புச் செலவீனங்களை பெருமளவில் அதிகரிக்குமாறு புதிய பாதுகாப்புச் செயலாளர் டான் ஜார்விஸ் (Dan Jarvis), நாட்டின் அடுத்த பிரதமராக வரவுள்ள ஆண்டி பர்ன்ஹாமிடம் (Andy Burnham) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள பின்னணியில், எதிர்வரும் 2030ம் ஆண்டிலிருந்து இராணுவத்திற்கான நிதியை 25 பில்லியன் பவுண்ட்ஸ் வரை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
துருக்கியின் அங்காராவில் (Ankara) நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜார்விஸ், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து இந்த நிதி அதிகரிப்பு தொடர்பான பிரித்தானியாவின் உறுதிப்பாட்டை தனிப்பட்ட ரீதியில் வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.











