ஐரோப்பியப் பிராந்தியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பிரிட்டன் (UK) உட்பட 12 நேட்டோ கூட்டணி நாடுகள் இணைந்து அடுத்த 10 ஆண்டுகளில் புதிய நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்திற்காக 37 பில்லியன் பவுண்டுகள் செலவிடவுள்ளன.
பிரிட்டன் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ‘டவுனிங் ஸ்ட்ரீட்’ இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் இன்று நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் இத்திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
நேட்டோவின் அதிநவீன ஆயுதங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஏவுகணை, சுமார் 200 மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளை மிகவும் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.
இதன் இலக்குத் தூரத்தை 1,250 மைல்கள் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் பிரதமராகத் தனது இறுதி நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்காரா சென்றுள்ளார்.
இம்மாநாட்டில் இந்த ஏவுகணைத் திட்டம் குறித்து விவாதிக்க சுமார் 12 நாட்டுத் தலைவர்களை அவர் ஒருங்கிணைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













