பதவி நீக்கப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அவரது நண்பரான தற்போதைய பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2024 மாணவர் போராட்டங்களின் போது சுமார் 1,400 பேரைக் கொன்றதற்காக, கொடிய குற்றங்களுக்காக நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
வழக்குகளை எதிர்கொள்வதற்காக பங்களாதேஷ் திரும்புவதாக ஹசீனா ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த சில நாட்களுக்குப் பின்னர் , ஜனாதிபதியின் இந்த ராஜினாமா முடிவு வந்துள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ள நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமது நாடு திரும்பிய பின்னர் , ஜனாதிபதி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார காரணங்களுக்காக இந்த ராஜினாமா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும், ஆளும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பி.என்.பி) தலைவர்களிடமிருந்து வரும் வலுவான அரசியல் அழுத்தமே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.















