அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீ விபத்தில் முற்றிலும் அழிந்த ஒரு வீட்டில், ஆறு குழந்தைகள் உட்பட எட்டு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சில உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
















