குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாம் கைது செய்யப்பட்டு அநியாயமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஆட்சேபித்து, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்மனுதாரர்கள் சார்பில் பிரதி மன்றாடியர் நாயகம் சுஹர்ஷி ஹேரத் தமது வாதங்களை விரிவாக முன்வைத்தையடுத்து, குறித்த மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.














