பிரித்தானியாவின் சமூகப் பராமரிப்பு அமைப்பைச் சீரமைப்பதற்காக, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பதாக பிரதமர் அன்டி பே(ர்)னாம்’ உறுதியளிப்பார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மிகவும் அவசியமான சீர்திருத்தங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காக, இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்களை பிரதமர் இன்று சந்திக்கவுள்ளார்.
இதன்போது கடந்த கால வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வுகளைக் காணுமாறு அழைப்பு விடுப்பார் எனத் தெரியவருகிறது.
முன்னதாக கடந்தகால அரசாங்கங்களால் வயது வந்தோருக்கான சமூகப் பராமரிப்பு புறக்கணிக்கப்பட்டதாக பிரதமர் குற்றம் சுமத்தியிருந்தார்.
தேசிய சுகாதார சேவை பராமரிப்பைப் போலல்லாமல், சமூகப் பராமரிப்பு இலவசமானதல்ல என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், பல தசாப்தங்களாக, அரசாங்கங்கள் இந்தப் பிரச்சினையை மிகவும் அபாயகரமானது, கடினமானது மற்றும் சிக்கலானது என்று கருதியதால், அதைத் தள்ளிப் போட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அரசியல்வாதிகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
எனவே இதை சீர் செய்வதற்கு, நாம் ஒருமித்த கருத்தைக் கண்டறிந்து, முன்னேறுவதற்கான வழியைக் காண மற்றவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.













