• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையின் முன்னோடித் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஆரம்ப கட்டமாக 25 கிலோ மீற்றர் வரையான தூரங்களுக்கு பயணிகள் ட்ரோன்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 

சுற்றுலாத் தலங்களை இணைக்கும் இரண்டு சாத்தியமான விமானப் பாதைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட சோதனைகளில் கொழும்பு – தென் கடற்கரை, கட்டுநாயக்க மற்றும் போர்ட் சிட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் பாதைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதற்காக இரண்டு ட்ரோன் விமானங்கள் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சோதனைத் திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களில் ட்ரோன்களின் இயக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, பொருத்தமான விமானப் பாதைகள் உருவாக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டம் முதன்மையாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது. 

அதேவேளை, அவசரகால மற்றும் அனர்த்த மீட்புப் பணிகள், கடல்சார் மற்றும் கடற்படை நடவடிக்கைகளிலும் பயணிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

பயணிகள் ட்ரோன்களின் முக்கிய நன்மைகளில் ஒன்று, அவை புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஒப்பீட்டளவில் குறைந்த இடமே தேவைப்படுவதாகும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட சோதனைகள் நிறைவடைந்த ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவையை வணிக ரீதியாக ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: drone pilot projectRuwan Kodithuwakkuட்ரோன் சேவைருவன் கொடிதுவக்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

Next Post

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

Related Posts

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!
ஆசிரியர் தெரிவு

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

2026-08-20
தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!
இலங்கை

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

2026-08-20
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

LTTE பயிற்சி முகாம் குற்றச்சாட்டு பொய்யானது; பொலிஸார் உறுதி!

2026-08-20
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

காருடன் மோதிய முச்சக்கர வண்டி: சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

2026-08-20
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-20
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

2026-08-19
Next Post
40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

0
செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

0
தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

0
தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

LTTE பயிற்சி முகாம் குற்றச்சாட்டு பொய்யானது; பொலிஸார் உறுதி!

0
40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

2026-08-20
செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

2026-08-20
தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

2026-08-20
தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

2026-08-20
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

LTTE பயிற்சி முகாம் குற்றச்சாட்டு பொய்யானது; பொலிஸார் உறுதி!

2026-08-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.