நேபாளத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கை நாட்டினருக்கு உதவுவதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சு 24 மணிநேர அவசர உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
உதவி தேவைப்படக்கூடிய இலங்கை நாட்டவர்களுக்கு அவசர உதவி, ஒருங்கிணைப்பு மற்றும் பிற தேவையான ஆதரவை வழங்குவதற்கான ஏற்பாடுகளாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் அவசர உதவி தேவைப்படும் இலங்கையர்கள், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை பின்வரும் வழிகள் மூலம் தொடர்பு கொள்ளலாம்:
- அவரச உதவி இலக்கம் : +977 985 104 8653
- மின்னஞ்சல்: slemb.kathmandu@mfa.gov.lk
அவசர உதவி, ஒருங்கிணைப்பு மற்றும் உதவிகளைப் பெறுவதற்குத் தூதரகத் தொடர்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் உள்ள இலங்கை நாட்டவர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அண்மை நிலவரங்களை அறிந்துகொள்ள, பொது இராஜதந்திரப் பிரிவுக்கான பணிப்பாளர் நாயகமும் பேச்சாளருமான துஷார ரோட்ரிகோவைத் தொடர்புகொள்வதற்கான விவரங்களையும் அமைச்சு வழங்கியுள்ளது:
- மொபைல்/வாட்ஸ்அப்: 070 788 7778
- மின்னஞ்சல்: publicity@mfa.gov.lk
- தொலைநகல்: 0112 473 899
சூழ்நிலை மாறிவருவதைக் கருத்தில் கொண்டு, நேபாளத்தில் உள்ள இலங்கை நாட்டவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்குமாறும் அமைச்சு வலியுறுத்தியது.
















