தங்கல்ல பொலிஸ் பிரிவின் மஹாகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர், தங்கல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கொலை நேற்று இரவு (28) நிகழ்ந்தது.
உயிரிழந்தவர் மஹாகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர். என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கல்லே பொலிஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இறந்தவருக்கும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
28 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கல்லே பொலிஸ் மேலும் விசாரணை நடத்தி வருகிறது.














