கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், கட்டிடத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இச் சம்பவம் அதிகாலை சுமார் 3:00 மணியளவில் இடம்பெற்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்களில் ஒருவர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் நடந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












