கட்சி நிதியின் மூலம் திமுக ஊழலில் ஈடுபட்டதாக அமுலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளதாகத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (07) தெரிவித்தார்.
கட்சி நிதியின் பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் பெயர்களை அமுலாக்கத் துறை (ED) குறிப்பிட்டதாக விஜய் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் என்ற தனது அதிகாரபூர்வ பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை குற்றம் சாட்டியிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் நடைபெற்றதாக நான் குறிப்பிட்ட மூன்று துறைகளுக்குச் சம்பந்தப்பட்ட கோப்புகளைத் திறக்குமாறு திமுக எனக்குச் சவால் விடுத்தது.
அந்தக் கோப்புகளைத் திறப்பதற்கு முன்னதாக, 1988-ல் திமுக அரசின் ஊழல் குறித்து அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கையை நான் வாசிக்க விரும்புகிறேன்.
சர்க்காரியா ஆணையம் தனது அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதலமைச்சர் என்ற தனது அதிகாரபூர்வ பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகச் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டியுள்ளது என்று கூறினார்.
கட்சி நிதியைக் கொண்டு ஊழல் செய்ததாக திமுக மீது அமுலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கட்சி நிதியின் பெயரில் பணம் வசூலித்ததாக அமுலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அக்கட்சியின் தலைவர் ஒருவர், தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் இறந்துபோக வேண்டும் என்று கூறியதாகக் குற்றம் சாட்டி திமுகவைச் சாடிய அவர், இத்தகைய மனப்பான்மை கொண்ட ஒரு கட்சி ஏன் அரசியல் கட்சியாகத் தொடர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்துப் பேசிய விஜய், காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடுதல் அம்சங்களுடன் அத்துறை டிஜிட்டல் மயமாக்கப்படும், காவல்துறை எந்தவிதத் தலையீடும் இன்றி சுதந்திரமாகச் செயல்படும் என்று அவர் உறுதியளித்தார்.
நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அரசியல் விமர்சனங்கள் கடுமையாக இருக்கலாம் என்றாலும் பெண்களுக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்று கூறிய விஜய், மக்கள் அத்தகைய கருத்துகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தனது அரசியல் வெற்றிக்கு பெண்களே முக்கிய காரணம் என்று கூறிய அவர், அவர்களுக்கு எதிரான தரக்குறைவான பேச்சை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்.














