மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலினால் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும்.
காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கி.மீ வரை இருக்கும்.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும், புத்தளம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் நிலை:
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும், புத்தளம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடிடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.













