• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!

பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

அதேபோல், நாடு அடைந்துள்ள இந்த பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத் தரத்தை இலகுபடுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டு பிரதானி எவன் பபகோர்ஜியோ (Evan Papageorgiou) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் பிரதிநிதிகள் குழுவானது, இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (EFF) வேலைத்திட்டத்தின் ஏழாவது மீளாய்வு மற்றும் 2026  IV பிரிவுக்குட்பட்டு ஆலோசனை வழங்குவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதோடு, அவர்கள் செப்டம்பர் 10 முதல் 23 வரை கொழும்பில் தங்கியிருப்பர்.

இலங்கை தற்போது  அடைந்துள்ள சிறப்பான பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் எவன் பபகோர்ஜியோ பாராட்டுத் தெரிவித்ததோடு, விசேடமாக அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட நிதி ஒழுங்கைப் பேணுவதற்காக கடந்த காலங்களில் இலங்கை பின்பற்றிய நடவடிக்கைகள் தொடர்பிலும்  இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

எட்டியுள்ள இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பொருளாதார ஸ்திரத்தன்மையை  அடைவதில் அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் ஒரு முக்கியமான அடித்தளத்தை வழங்கியதாக மேலும் தெரிவித்தார். 

அண்மையில் இலங்கை முகம்கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தமான ‘டித்வா’  அனர்த்த நிலைமைக்கும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கத்திற்கும் பலமாக முகம்கொடுப்பதற்கு அந்த பொருளாதார ஸ்திரத்தன்மை முக்கிய காரணியாக அமைந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதேபோல், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 4.2% மட்டத்தில் பேணிக் கொள்ள முடிந்துள்ளமையும், பொருளாதாரம் வழமைக்குத் திரும்பி வருகின்றமைக்கான முக்கியமான சமிக்ஞையாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், கடந்த இரு வருடங்களாக அரசாங்கம் வரி வருமானங்களைச் சேகரிப்பதில் காட்டிய செயற்திறனையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முக்கியமான காரணியாக விளங்கும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக  எரிசக்தி செலவுகள் தொடர்பில் மக்கள் முகம்கொடுக்க நேர்ந்துள்ள சிரமங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல்  அபொன்சு  உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

May be an image of dais

May be an image of text

Related

Tags: IMFஅநுரகுமார திசாநாயக்கசர்வதேச நாணய நிதியம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

Related Posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

2026-09-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-09-18
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

2026-09-17
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!
இலங்கை

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

2026-09-17
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!
இலங்கை

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

2026-09-17
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!
இலங்கை

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

2026-09-17
Next Post
அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

0
பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!

பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

0
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

0
அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

2026-09-18
பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!

பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!

2026-09-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-09-18
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

2026-09-17
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

2026-09-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.