மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (13) காலை 11:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை அதிகாலை 1:00 மணி வரை செல்லுபடியாகும்.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னலுடன் கூடிய பரவலான இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.மின்னல் தொடர்பான விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களைத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
















