முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு (open-heart surgery) உட்படுத்தப்படுகிறாரா என்பதைச் சரிபார்க்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷிந்திர ராஜபக்ஷவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலையாகி, தனது கட்சிக்காரர் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்ததுடன், சிறப்பு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பிணை கோரியதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன.
இருப்பினும், ,லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை (CIABOC) பிரதிநிதித்துவப்படுத்திய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அத்தகைய அறுவை சிகிச்சை குறித்து அரசுத் தரப்புக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தக் கூற்றைச் சரிபார்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
இவ்வழக்கு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) கணக்கு தொடர்பான விசாரணைகள் காரணமாக ஷிரந்தி ராஜபக்ஷ தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.





