யாழ்ப்பாண மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சுமார் 10 ஆயிரத்து 800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் பயன்படுத்தி, அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அனைத்துப் பொது நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், திட்ட முன்மொழிவுகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகளை உரிய காலத்தில் சமர்ப்பிக்கவும், நிதி முகாமைத்துவ விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தியுள்ளார்.
















