இப்பருவகாலத்திற்கான FORMULA ONE CHAMPIONSHIP போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
24 சுற்றுக்களை கொண்டதாக அமைந்துள்ள போட்டிகளில் 17 கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அன்டோநெலி 8 போட்டிகள் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியில் முதலிடத்தில் காணப்படுகிறார்.
ஜோர்ஜ் ரஸ்ஸல் 2 இரண்டாமிடத்திலும் ,ஹெமில்டன் 3மிடத்திலும் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட திடீர் போர் பதற்றம் காரணமாக சவூதி அரேபியாவில் நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்படுள்ளது.
18வது கட்டப்போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
62 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த குறித்த போட்டியில் ஆரம்பமே வெஸ்டாபன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.
முதல் 6 இடங்களையும் முன்னனி வீரர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பமே போட்டி விறுவிறுப்பானது.
ஆரம்ப சுற்றுக்களில் வீரர்கள் ஒவ்வொரு வீரர்களையும் முந்தி செல்ல கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர்.
5வது சுற்றிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த பேர்மன் சிறப்பாக முன்னோக்கி சென்றார்.
8வது சுற்றில் வைத்து போர்டொலேடோ வின் வாகனம் கோளாறுக்குள்ளாகி அவர் போட்டியிலிருந்து விலகினார்.
மறுபுறம் முன்னனி வீரர்கள் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்தனர். வெஸ்டாபன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்தும் முன்னோக்கி சென்றார்.
36வது சுற்றில் வைத்து 15வது இடத்தில் இருந்த ஹெட்ஜர் முன்னோக்கி செல்ல மும்முரம் காட்டினார். அதற்கு பலனும் கிடைத்தது.
39வது சுற்றில் வைத்து பிரேக் மற்றும் கிளட்சில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரினால் லான்ஸ் ஸ்ரோல் போட்டியிலிருந்து விலகினார்.
40வது சுற்றில் வைத்து லெக்லர்க் மற்றும் அன்டோநெலி ஆகியோர் பிட்ஸ் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டனர்.
46வது சுற்றில் வைத்து ஹெமிலடனுடன் பேசி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டார் லெக்லர்க்,
47வது சுற்றில் வைத்து பின்தள்ளப்பட்டிருந்த ரஸ்ஸல் கஸ்லியை பின்னுக்கு தள்ளி 9மிடத்திற்கு முன்னேறினார்.
54வது சுற்றில் வைத்து ஹெமில்டன் மற்றும் நொரிஸிற்கிடையில் 3மிடத்திற்கான போட்டி சூடுபிடித்தது. போட்டியில் திடிரென சறுக்கிய ஹெமில்டன் முன்னிலை இடத்திலிருந்து பின்தள்ளபட்டார். அவரின் டயர் அவருக்கு கடைசி தருணத்தில் சாதக பலனை கொடுக்கவில்லை, இதனால் நொரிஸிடம் தப்பிய ஹெமில்டன் அன்டோநெலியிடம் சிக்கினார். இதனால் அவரின் 3மிடத் பறிபோனது.
அடுத்த சுற்றில் நொரிசும் அவரின் இடத்தை கைப்பற்றி அசத்தினார்.
ஹட்ஜர் கடைசி தருணத்தில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறி அசத்தினார்.
பின்னர் போட்டியின் கடைசி சுற்றான 62வது சுற்றில் வைத்து ஹெமில்டனுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாக பியாஸட்ரியும் அவரை முந்தி 5மிடத்தை கைப்பற்றினார். இதனால் அவர் 6மிடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
இந்நிலையில் முதலிடத்தை முழூவதுமாக ஆக்கிரமித்த மெக்ஸ் வெஸ்டாபன் 62 சுற்றுக்களையும் 1 மணித்தியாலம் 42 நிமிடங்களில் நிறைவு செய்து சிங்கப்பூர் குரோன்ப்ரீயை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ச்சியாக இப்பருவகாலத்தில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் வெஸ்டாபன் என்பதும் குறிப்பிடதக்கது.
















