மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்ட புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 15 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே புதன்கிழமை அதிகாலை புயல் கரையைக் கடக்கக்கூடும் எனவும், அப்போது மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















