• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்!

Discussion held with the British High Commissioner regarding issues including a political solution for the Tamil people and land appropriation!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

30.10. 2026 காலை 10 மணி அளவில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்த்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பற்றிக் அவர்களுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் அவர்களும் சந்தித்துள்ளனர்.

பிரதான விடயமாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட மசோதா (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மசோதா (OCB) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அதிலும் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொள்ள இருக்கும் அபாயங்களை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்கான நீதிப் பொறிமுறை, மற்றும் திட்டமிட்டு பின் போடப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்கள் என்பவற்றிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்ற நிலையிலே இந்த சட்டமூலங்களின் ஊடாக அந்தப் போராட்டங்களை ஒடுக்கவும் தனி மனிதர்களை குறி வைத்து வகை தொகை இன்றி கைதுகளை மேற்கொள்ளவும் வழி வகுக்கும் அபாயத்தை பற்றி சுட்டிக்காட்டப் பட்டது.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று மனித உரிமை பேரவையின் அறிக்கைகள் தெளிவாக கூறி வருகின்ற போதிலும் அரசாங்கம் அதை முற்றாக நீக்குவதற்கு பதிலாக, அதற்கு பதிலீடான ஆபத்தான சட்டங்களை நடைமுறைப்படுத்த முனைவது தமிழ் மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்தான விடயம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் இழுத்தடித்து வருவது எமது பிரதேசங்களில் மாகாண சபையின் நிர்வாக கட்டமைப்பு இல்லாமையினால் பல்வேறு அரச நிறுவனங்களினால் காணி அபகரிப்புக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்பதும் முன்வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் மேச்சல் தரையான மாதவனை மயிலத்தமடு பிரதேசங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய மேய்ச்சல் தரையை அபகரித்து கால்நடை வளர்ப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலை நிலவுவது விளக்கப்பட்டது.

நாட்டின் தற்கால சூழலில் நடைபெறும் அரசியல் விடயங்களைப் பற்றி கலந்துரையாடிய வேளையில், அளவுக்கு அதிகமான வரிகளினாலும் கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வினாலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்கள் மாத்திரம் அல்ல மற்றவர்களும் வாழ்வாதார ரீதியாக கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதும் எடுத்துரைக்கப் பட்டது.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் கருதி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதையும், அதேபோன்று தமிழ் தேசிய பேரவையோடு இணைந்து செயல்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் பொது விடயங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதையும் விளக்கி கூறப்பட்டது. கடந்த நாட்களில் தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதும் சுட்டி காட்டப்பட்டது.

புலம்பெயர் அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவாக தமிழ் தரப்புகளை ஒன்றிணைத்து செயலாற்றுகின்ற விடயமும் குறிப்பிடப்பட்டது.

இவற்றிற்கு பதில் அளித்த உயர் ஸ்தானிகர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை மனித உரிமை பேரவையின் அறிக்கையிலே கூட சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் சமர்ப்பிக்கப்பட்ட வேளைகளிலும் நாங்கள் அவற்றை கவனமாக அவதானித்து வந்துள்ளோம்.

அதேபோன்று இந்த முறையும் இந்த சட்டத்தை பற்றி நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.அத்துடன் இச்சந்திப்பு முடிவுற்றது.

Related

Tags: #OCB #ProvincialCouncilElection #TamilPoliticalIssues #SriLanka #AthavanNews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுங்கத்தில் தேங்கியுள்ள 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் – தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Next Post

கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!

Related Posts

கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!
இலங்கை

கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!

2026-10-30
சுங்கத்தில் தேங்கியுள்ள 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் – தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
இலங்கை

சுங்கத்தில் தேங்கியுள்ள 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் – தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

2026-10-30
அநுராதபுரம் புனித பூமியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க 32 பேர் கொண்ட குழு நியமனம்!
இலங்கை

அநுராதபுரம் புனித பூமியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க 32 பேர் கொண்ட குழு நியமனம்!

2026-10-30
ஹெட்ரிக்  கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ
ஆசிரியர் தெரிவு

ஹெட்ரிக் கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ

2026-10-30
மோட்டார் போக்குவரத்து திணைக்கள முறைகேடுகள் – தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து விசாரணை!
இலங்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்கள முறைகேடுகள் – தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து விசாரணை!

2026-10-30
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
ஆசியா

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

2026-10-30
Next Post
கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!

கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!

கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!

0
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்!

0
சுங்கத்தில் தேங்கியுள்ள 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் – தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சுங்கத்தில் தேங்கியுள்ள 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் – தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

0
அநுராதபுரம் புனித பூமியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க 32 பேர் கொண்ட குழு நியமனம்!

அநுராதபுரம் புனித பூமியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க 32 பேர் கொண்ட குழு நியமனம்!

0
ஹெட்ரிக்  கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ

ஹெட்ரிக் கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ

0
கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!

கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!

2026-10-30
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்!

2026-10-30
சுங்கத்தில் தேங்கியுள்ள 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் – தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சுங்கத்தில் தேங்கியுள்ள 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் – தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

2026-10-30
அநுராதபுரம் புனித பூமியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க 32 பேர் கொண்ட குழு நியமனம்!

அநுராதபுரம் புனித பூமியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க 32 பேர் கொண்ட குழு நியமனம்!

2026-10-30
ஹெட்ரிக்  கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ

ஹெட்ரிக் கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ

2026-10-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: