மேல் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மின்னணு அமைப்பில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, மேல் மாகாணத்தில் வாகன வருமான உரிமங்களை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் அறிவிப்பின்படி,
சேவை இடைநிறுத்தம் இன்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்து, நவம்பர் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கும்.
இந்தக் காலப்பகுதியில் வருமான உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டிய வாகன உரிமையாளர்களுக்கு, நவம்பர் 25 முதல் 27 வரை எவ்வித அபராதக் கட்டணமும் இன்றி உரிமங்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ இணையதளமான www.motortraffic.wp.gov.lk வாயிலாக வழங்கப்படும் வாகன வருமான உரிமம் (vehicle revenue licence) தொடர்பான இணையச் சேவையும், நவம்பர் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை தற்காலிகமாகச் செயல்படாது.
திணைக்களத்தின் மின்னணு அமைப்பில் தொழில்நுட்ப மேம்பாடுகளை மேற்கொள்வதற்கு வசதியாக, தற்காலிக இடைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












