• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் – வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கை!

தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் – வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கை!

Litharsan by Litharsan
2021/04/04
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
78 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவ குறித்து வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையில்,

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, கடந்த 01/04/2021இல் இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ் தேசியம் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களைக் கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது.

16.04.1940இல் தீவகத்தில் பிறந்த இவர் தனது 27ஆவது வயதில் தன்னை ஆன்மீகத்திற்கு அர்ப்பணித்த காலம் தொட்டு சமயப் பணியோடு சமூகப் பணியையும் காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ் தேசியப் பணியையும் ஒருங்கே சமநோக்கோடு முன்னெடுத்துச் செயற்பட்டவர்.

1992ஆம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் ஓய்வு நிலைக்கு வரும் வரையான காலங்களில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வன்னி எங்கும் பரந்துபட்ட பல்வேறு சமூக சிந்தனைகளோடும் கல்வி, கலை, மறுவாழ்வு, சமூக சீர்திருத்தம் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளையும் தனது மூச்சாகக் கொண்டு தனது ஆயர் பணிக்கு மேலான பணிப்பொறுப்புகளாக அவற்றை ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் சமூகங்களுக்கும் அரும்பணி ஆற்றியவர்.

குறிப்பாக 2009இற்கு பின்னர் திக்கற்றிருந்த தமிழ் சமூகத்தின் மீட்புக்காக எல்லைகளைக் கடந்து செயற்பட்டுவந்த மிகச் சிறந்த மனிதர். மனித நேயத்தோடு மட்டுமல்லாது பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நேர்நின்று ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலைக்காக பல்வேறு பரிமாணங்களில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி சொற்களோடு மட்டுமல்லாது அவைளுக்கு செயல் வடிவம் கொடுத்து செயற்பட்டு வாழ்ந்து காட்டிய மகத்தான தமிழ் தேசிய இனத்தின் கலங்கரை விளக்காக இறுதிக்காலம் வரை செயற்பட்ட ஒரு கர்ம வீரர்.

தமிழ் சமூகம் காலத்துக்கு காலம் சவால்களைச் சந்தித்த போதெல்லாம் அவற்றைக் கடந்து செல்வதற்கான சவால்களை ஏற்று அந்த இடங்களெல்லாம் எமது இனத்தைக் கடந்துசெல்ல நல்வழி காட்டியவரும் அறவழி அன்பும் கருணையும் இரக்கமும் தேசப்பற்றும் இவரிடம் அளவில்லாத ஆளுமைகள் வளர்வதற்குக் காரணமாக இருந்தன.

உண்மையான விடயங்களை எதுவித தயக்கமும் இன்றி வெளி உலகிற்கு எடுத்துச் சொன்ன போதெல்லாம் பலவிதமான இடர்களை சந்தித்தவர். இதனால், இனவாதிகளினால் எதிரியாகவும், பயங்கவாதியாகவும் கூட இவர் சித்தரிக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா அரசு இன்னும் பல சர்வதேச நாடுகளும் இணைந்து தமிழினத்தின் மீதான இறுதிப் போரை கண்மூடித்தனமாக முன்னெடுத்து மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தின. பின்னர், அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் மனித உரிமை மீறல்களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகக் காத்திரமாகவும், ஆதாரபூர்வமாகவும் வெளிப்படுத்திய ஆன்மீகவாதி.

2009ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர். தமிழினத்தின் மீதான இனப் படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர்.

வன்னிப் போர்ப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கையை இந்திய அரசும் ஸ்ரீலங்கா அரசும் குறைத்துக்கூறி மக்களைப் பட்டினிச்சாவுக்கும் இனவழிப்புக்கும் உள்ளாக்கியதை ஸ்ரீலங்கா அரசின் முல்லைத்தீவின் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் அறிக்கையை வைத்து உலகிற்கு அம்பலப்படுத்தி ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 469 தமிழர்கள் 2009 யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போது கணக்கில் இல்லாது போனதை (Unaccounted) ஐ.நா. முதல் அகிலம் வரை அறியச்செய்தார். பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதிக்குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.

ஆயர் அவர்கள் 1994ஆம் ஆண்டு தனது ஜேர்மனிய விஜயத்தின்போது புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்தார். அன்றைய காலகட்டத்தில் அவரே அரசு-புலிகள் பேச்சுவார்த்தைக்கு மூலகாரணமாயிருந்தார். அன்றுதொட்டு அவர் அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஜோன் ஹரியைச் சந்திக்கச் செல்லுமட்டும் தன் ஆன்மீகக் கடமைகளோடு தன் தமிழினக் கடமைகளையும் உறுதியோடும் நேர்மையோடும் அதீத அக்கறையோடும் செய்து வந்தார். ஜோன் ஹரியைச் சந்திக்கச் செல்லும் வழியில் உடல்நலம் குன்றினார். இது சதியா அல்லது விதியா என நாமறியோம்.

யுத்த காலத்திலும் யுத்த மெளனிப்புக் காலத்திலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவச் சிறார்களுக்காக புலம்பெயர் நாடுகளில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாணவரைப் பொறுப்பெடுக்கவைத்து அவர்களின் கல்விக்கு உதவினார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல புதிய கிராமங்களை, வீட்டுத் திட்டங்களை அமைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றினார்.

அவர் ஒடுக்கப்பட்ட இனத்தின் காவலனாக விளங்கியது மட்டுமல்லாமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான எமது போராட்டத்தின் தொடக்கமுமாக அவரே இருந்தார். மீளக் குடியமர்ந்த பின்பு பலரும் காணாமல்போன தமது உறவுகளைத் தேடி அலைந்து திரிந்த போது அவர்களுக்கு ஆறுதலாகவும் வழிநடத்துபவராகவும் இருந்து அவர்களைப் பாதுகாத்தவர்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் உருவாகுவதற்கு மூல காரணமாக விளங்கியவர். இதன்மூலம் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வருவதில் மிகப்பெரும் பங்காற்றியவர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் ஆயர் மிகக்காத்திரமான பங்காற்றியுள்ளார். சகல சிறைச்சாலைகளுக்கும் நேரடியாகவே சென்று தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் ஊட்டியவர். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக சகல தரப்பினரோடும் தொடர்புகளை ஏற்படுத்தி பல வழிகளிலும் கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் ஆயரின் இழப்பால் துயறுற்றிருக்கும் அனைவருடனும் துயர் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வரும் ஐந்தாம் திகதி திங்கட்கிழமையை தமிழ் தேசிய துக்க தினமாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்படுத்தியிருந்தோம்.

இதற்கு தமிழ் தேசியக் கட்சிகள், பொது மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன் அனைவரும் தங்களின் வீடுகளிலும் பொது இடங்களிலும் வணிக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும் தங்கள் உடைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதேநாளில், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் சமூக அமைப்புகளின் விபரம்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்

வட-கிழக்கு சிவில் சமூக சம்மேளனம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு

பல்சமயங்களின் ஒன்றியம், மட்டக்களப்பு

சிவகுரு ஆதீனம், யாழ்ப்பாணம்

முதியோர் சம்மேளனம், மட்டக்களப்பு

வெண்மயில் அமைப்பு, மட்டக்களப்பு

அமெரிக்கன் மிஷன், மட்டக்களப்பு

சடோ லங்கா நிறுவனம், மட்டக்களப்பு

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம், வன்னி

அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம்

தமிழர் நலன் காப்பகம், மட்டக்களப்பு

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, மட்டக்களப்பு

புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு, திருகோணமலை

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, யாழ்ப்பாணம்

உலக தமிழர் மாணவர் ஒன்றியம்

இராவண சேனை, திருகோணமலை

கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்

தாய்நிலம் அறக்கட்டளை, சாவகச்சேரி

முல்லை மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையம்

YMCA மட்டக்களப்பு

வாலை அம்மன் சனசமூக நிலையம் – திருநெல்வேலி கிழக்கு

வடக்கு விளையாட்டு கழகம்

மகளிர் அபிவிருத்தி நிலையம்

வடக்கு கிழக்கு பொது அமைப்புகள், மற்றும் சம்மேளனங்கள்.

Related

Tags: Rayappu Josephஇராயப்பு ஜோசப் ஆண்டகைசிவில் சமூக அமைப்புகள்சிவில் சமூக அமைப்புக்கள்வடக்கு கிழக்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் மணிவண்ணன்!

Next Post

மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பு!

Related Posts

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

2026-08-01
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!
இந்தியா

ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-08-01
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

2026-08-01
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹர சிறையில் அமைதியின்மை!

2026-08-01
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தது மத்திய அரசு

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

0
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறையில் அமைதியின்மை!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

2026-08-01
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-08-01
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

2026-08-01
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறையில் அமைதியின்மை!

2026-08-01

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.