புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இது குறித்த உத்தரவுகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,’ 20 ஆம் திகதி முதல் ஹோட்டல்களில் இரவு எட்டு மணிவரை மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும். அதன்பிறகு 10 மணிவரை உணவு பொதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
புதுச்சேரி கடற்கரை சாலையில், காலை 5 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே பயணிக்க முடியும். அதேநேரம் தமிழகத்தை போன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.



















