ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈராக்கில் வைரஸ் தொற்றினால், 15ஆயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் ஈராக்கில், இதுவரை ஒன்பது இலட்சத்து 84ஆயிரத்து 950பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 775பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐந்தாயிரத்து 885பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 493பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக எட்டு இலட்சத்து 64ஆயிரத்து 39பேர் பூரண குணமடைந்துள்ளனர்.